சாவகச்சேரி நகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்.
சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு 30/11 புதன்கிழமை நகரசபையில் இடம்பெற்ற விசேட அமர்வின் போது ஏகமனதாக சபையால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற வரவு-செலவுத்திட்டத்திற்கான அங்கீகார கூட்டத்தில் சபையின் 18உறுப்பினர்களில் 16பேர் வருகை தந்திருந்த நிலையில் பாதீடு எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.குறித் த கூட்டத்திற்கு பெரமுன உறுப்பினர் ஒருவரும்,ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரும் வருகை தரவில்லை.
நகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு 134மில்லியன் ரூபாய் என்ற உத்தேச வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதீட்டில் உறுப்பினர்களுக்கு தலா 10இலட்சம் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதேவேளையில் நகரப்பூங்கா அபிவிருத்தி,மயான அபிவிருத்தி,கல்வி மேம்பாடு,முதியோர் நலன் பேணும் திட்டங்கள் உள்ளிட்ட பொதுவான மக்கள் நலன் சார்ந்த அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை