மீண்டும் இஸ்ரேலில் அதிகரிக்கும் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை
இன்று அதிகாலை வான்வழியாக தெற்கு இஸ்ரேல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை இலக்கு வைத்து இன்றைய தினம் அதிகாலை வான்வழியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தெற்கு இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள முக்கிய மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போர் விமான தாக்குதல்
இதேவேளை தெற்கு இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள முக்கிய மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேல் பகுதியில் இடம்பெற்ற இந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த தாக்குதல் நேற்றைய தினம் சனிக்கிழமை இஸ்ரேல் மற்றும் காசா எல்லைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கவலை
குறித்த வன்முறை சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கவலையை தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குப் பிராந்தியங்களில் தொடரும் வன்முறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி உறவுக் கொள்கைத் தலைவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
சென்ற வாரம் இஸ்ரேல் படைகளால் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், இந்த படுகொலைகளை ஏற்க முடியாது என்றும் பொறுப்புக் கூறவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை