நீதிமன்றில் வழக்குக்காக வைக்கப்படிருந்த 44 பவுண் தங்கநகை மாயம்
வழக்குக்காக நீதிமன்ற களஞ்சியசாலையில் வைக்கப்படிருந்த 44 பவுணுக்கும் அதிகமான தங்கப்பவுண் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் வழக்குக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுணுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களே திருடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வழக்குப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த நகைகள்
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்தனர். வாழைத்தோட்டம் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலுள்ள இரண்டு காவல் நிலையங்கள் தொடர்பான வழக்குப் பொருட்களாக இந்த தங்க ஆபரணங்கள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டு இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை