அசீமையும் FRIEND ah வச்சுக்கனும்.. தனாவையும் FRIEND ah வச்சுக்கனும்”.. அசீமை சம்பவம் செய்த கமல்!
தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.
இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர்.
இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.
இந்த டாஸ்க்கிற்கு மத்தியில், அசீம் இரவு நேரத்தில் பூக்களை திருடி இருந்த விஷயம், ஏலியன் அணியில் இருந்தவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருந்தது. பழங்குடி இன அணியில் இருந்து யாரும் பூக்களை இரவு நேரத்தில் எடுக்க மாட்டோம் என கூறியதால் தான் தனியாக போய் தூங்கியதாகவும் ஆனால் இப்படி நடந்து போய் விட்டது என்றும் ஆதங்கத்துடன் மணிகண்டா, குயின்சி உள்ளிட்டோர் கூறி இருந்தனர்.
மேலும், அசீம் இப்படி செய்ததற்காக அவரிடமே மணிகண்டா முறையிட்டிருந்தார். இது ஒருபுறம் இருக்க, அமுதவாணனை அடிப்பதற்காக அவர் உடலில் அசீம் கை வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. முன்னதாக, பழங்குடி அணியில் இருப்பவர்கள் கூட அசீம் தனியாக எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தது, அணிக்குள்ளேயே சண்டையை உண்டு பண்ணி இருந்தது. இதற்கிடையே, மயக்கம் போட்டும் கீழே விழுந்திருந்தார் அசீம். அப்போது தன்னை வெளியே அனுப்புமாறும் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்திருந்தார் அசீம். இப்படி இந்த வாரம் முழுக்க அசீம் குறித்த விவகாரங்கள் தான் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது.
ஒரு பக்கம், அசீம் தன் உடலில் கை வைத்ததாக அமுதவாணனும் குற்றஞ்சாட்ட, மறுபக்கம் முடிந்தால் என்னை அடி என்றும் அவரிடம் அசீம் எகிறி இருந்தார். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பிக் பாஸ் பார்வையாளர்களும் தெரிவித்து வரும் நிலையில் நிச்சயம் இந்த வார இறுதியில் கமலஹாசன் இது குறித்து அசீமிடம் விவாதிப்பார் என்றும் தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில், கேமராவை பார்த்து பேசி இருந்த அசீம், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டும் என்று தொடர்ந்து விளையாட விருப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, பிக் பாஸிடம் பேச வேண்டும் என பலமுறை குறிப்பிட்டும் பிக் பாஸ் இன்னும் என்னை அழைக்கவில்லை என்றும் அசீம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் சண்டை போட்டது தொடர்பான விஷயத்தை ஒளிபரப்ப வேண்டாம் என கேமரா முன்பு அசீம் கேட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பாக கேமரா முன்பு பேசும் அசீம், “இன்னைக்கு நடந்த சண்ட ரொம்ப கோவத்துல நடந்துருச்சு. ப்ளீஸ் அது மட்டும் நாளைக்கு டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க. இது என்னோட தாழ்மையான வேண்டுகோள், ப்ளீஸ் பிக்பாஸ். ஏற்கனவே கமல் சார் நிறைய பேசிட்டாரு, ஏன்னா நான் பண்ணது தப்பு தான். இதுக்கு நான் அமுதவாணன் கிட்டயே சாரி கேட்டுட்டேன்.
ரொம்ப கோவம் வந்துருச்சு, ஏன்னா கையை கட்டுறது, காலை கட்டுறதுன்னு Physical Harassment பண்ணதுனால ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன். இதனால என் கண்ட்ரோல் நான் இழந்துட்டேன். அதனால் அமுதவாணன அப்படி பேசிட்டேன். பேசினது தப்பு தான். அதுனால அந்த சண்டையை மட்டும் நாளைக்கு டெலிகாஸ்ட் பண்ணாதீங்க பிக் பாஸ். டெலிகாஸ்ட் ஆனா என்னோட பேர் பெருசா டேமேஜ் ஆகும். ப்ளீஸ் பிக் பாஸ் இது என்னோட தாழ்மையுடன் வேண்டுகோள்” என அசீம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் கலந்து கொண்டு கடந்த வாரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து போட்டியாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போ அசீமிடம் பேசிய கமல்ஹாசன், “இந்த முறை உங்களை பேச வைக்க போவதில்லை அசீம். நீங்கள் என்ன சொல்வீங்க என்றும் எனக்கு தெரியும். எனக்கு எல்லாம் மனப்பாடம் ஆயிடுச்சு. நான் ரச்சிதாவுக்கு சொன்ன அதே வார்னிங் உங்களுக்கும் பொருந்தும். புரியுதுங்களா? மிகவும் பிரமாதமான வாய்ப்பு இது. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். திறமையாளர்கள் வெல்க. இதில் இரண்டாவது மூன்றாவது இடம் பிடிக்கும் நபர்கள் கூட பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன். இது ஒரு நல்ல இடம், கௌரவமாக அழகாக தரம் குறையாமல் விளையாடுவது தான் நாம் எல்லோருக்கும் பெருமை. என்னையும் சேர்த்து சொல்கிறேன். எனக்கு இருக்கும் ஒரு அறுவறுப்பை பளிச்சென்று நான் ஏன் மூஞ்சில போட்டு உடைக்கணும்? அசிமையும் பிரண்டா வச்சுக்கணும் தனலட்சுமியையும் பிரண்டா வச்சுக்கணும். எல்லாரையும் பிரண்டா வச்சுக்கணும். இதுக்கு எதுக்கு விமர்சனம் சொல்லி பெயரை கெடுத்துக்கணும்?. கூடவே என் பேரும் சேர்ந்து கெடும் என்ற சுயநலத்தில் இதை சொல்றேன். தரத்தைப் பின்பற்றுங்கள். உங்களின் நன்நடத்தை கெட்டிக்காரத்தனத்தை காட்ட கூடிய வகையில் காட்டினால் அதற்கு பாராட்டு உண்டு. அந்த வெற்றி தான் உங்களுக்கு அழகாக இருக்கும்” என கமல்ஹாசன் பேசினார்.
கருத்துக்களேதுமில்லை