சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்
சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கில் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார விவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து வருகின்றது.
மேலும் அம்பாரை மாவட்டத்தில் அறப்பணி செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் ஆறுமுக நாவலர் அறப்பணி திட்டத்தின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் 08 பிரதேச செயலக பிரிவுகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு செயற்பாடாக அம்பாரை மாவட்டத்தில் 04 பிரதேச செயலக கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் 75 குடும்பங்களுக்கு நேற்றய தினம் வழங்கப்பபட்டது குடும்பங்களுக்கான பெருமத்தியான உலர் உணவுகள் வழங்கிவைக்கப்பட்டன அம்பாரை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்க செயலாளர் இரா. குணசிங்கம்தலைமையில் 04/12/2022 பி.ப.3.00மணியளவில் கண்ணகி அம்மன் ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் ஆன்மிக அதிதியாக காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள், காரைதீவு பிரதேச செயலக செயலாளர் திரு.சி.ஜெயராஜன் ஆகியோரினால் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்… காரைதீவு அறங்காவலர் சபை செயலாளர் திரு.சி.நந்தேஸ்வரன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜ், இந்து ஸ்வயம் சேவக சங்க காரைதீவு இணைப்பாளர் திரு. நடராஜா, ஆலயங்களின் பிரதிநிதிகள், இந்து ஸ்வயம் சேவக சங்க உறுப்பினர்களான காந்தன்,துலக்சன், ராஜரிசுபன், லோவிதாஸ், யுவராஜ்,உமாசுதன் ஆசிரியர், பூபாலரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை