சாம்பல்தீவு தி/சல்லி அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் தி/சல்லி அம்பாள் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 41 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வானது
03/12/2022 காலை 10.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.சிவஞானமுர்த்தி முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான தொழிலான கடற் தொழிலே பிரதான தொழிலாக காணப்படுகின்றது.

மேலும்…
இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது கல்வியில் அக்கறை காட்டியும் பாடசாலையை விட்டு விலகாமல் அவர்களை பாடசாலைக்கு தினமும் சென்று கல்வியை கற்க வேண்டும் என்ற மனோதைரியத்தினை வலியையும் உணர்ந்து “ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் சிந்தனைக்கு இணங்க மாணவர்களின் மனதில் இதனை பதித்து வைக்கின்றனர்.

மேலும் …

மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் இன் நிகழ்வில் அன்புவெளிபுரம் தி /கலைமகள் மகா வித்தியாலய அதிபர்.திரு.நாகரசா காளிதாசன் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. நடராசமணி அருட்செல்வம், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன்,திரு. எஸ்.காந்தன், திரு. நா. சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில் உயர்தரம் கற்கும் அருச்செல்வம் பிரதிஷா எனும் மாணவி பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற 3000 m தடை தாண்டல் ஓட்ட நிகழ்வில் தேசிய ரிதியில் 2ம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் அக் கிராமத்திற்கும் பெருமையினை பெற்றுக் கொடுத்துள்ளார். இப் பாடசாலைக்கு மைதானம் இல்லாமே இம் மாணவியினால் இதனை சாதித்துள்ளார். மேலும் பல மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்கின்றனர் இதற்க்கான ஒரு மைதானத்தைனை பெறுவதற்கும் சில நலன் விருப்பிகள் முன்வந்துள்ள போதிலும் அது முழுமை அடையவில்லை இதற்கு பாடசாலையில் அக்கறை உள்ளவர்கள் யாராவது முன்வந்து செய்து தரவேண்டும் ஏன கூறினார்.
மேலும் இப் பாடசாலையில் 303 மாணவர்கள் தரம் 01தொடக்கம் A/L வரை கல்வி கற்கின்றனர் அதில் அதிகமாணவர்கள் பாதணிகள் இல்லாமலே வருகின்றார்கள் ஏன தனது கருத்தினிலே கூறினார்.

இணைந்த கரங்கள் அமைப்பினரால் சாம்பல்தீவு தி/சல்லி அம்பாள் வித்தியாலய பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்விகற்கும் 41 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் உறவுகளினால் இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன் திரு.எஸ்.காந்தன், திரு.சனாதனன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.