வற்புறுத்தி கொடுக்கப்பட்ட மதுபானம்; மாணவனுக்கு நடந்த விபரீதம்!
மாணவர் ஒருவருக்கு மதுபானம் கொடுக்கப்பட்ட நிலையில் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கிளிநொச்சி நகரில் உள்ள கல்வி நிலையமொன்றிலே இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி பயிலும் 16 வயது மாணவனே இவ்வாறு விழுந்து காயமடைந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு தண்ணீருடன் மதுபானத்தை கலந்து சக மாணவர்கள் கொடுத்த நிலையில் அதை அருந்தியதால் நிலை தடுமாறிய மாணவன் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
எந்தவித குடி பழக்கமும் இல்லாத குறித்த மாணவனுக்கு சக மாணவர்கள் வற்புறுத்தி மதுபானத்தை கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் போதையான நிலையில் மாணவன் துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த குறித்த மாணவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை