யாழ். ஊர்காவற்றுறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை மரணம்
ஊர்காவற்றுறையில் உள்ள தேவாலயம் ஒன்றின் குளியலறைக்குள் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற குழந்தையே உயிரிழந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தையுடன் பெற்றோர் தேவாலயத்துக்கு வழிபாட்டுக்காகச் சென்றிருந்தனர். வழிபாட்டின்போது காலை 9.30 மணி முதல் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் தேடினர். தேடுதலின் பின்னர் 10.30 மணியளவில் தேவாலயத்தின் குளியலறைக்குள் இருந்த 20 லீற்றர் வாளிக்குள் குழந்தை மூழ்கிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை