பசில் ராஜபக்சவிற்கு எதிராக மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்!!

அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக அந்தக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு ஓடியொழிந்துகொண்டிருந்த பசில் ராஜபக்ச பொதுவெளியில் சுதந்திரமாக வந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு குற்றவாளியென நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

பசிலுக்கு எதிராக மொட்டுக்குள் வெடித்தது போர் | War Was Nipped In The Bud Against Basil

பசில் ராஜபக்ச தற்போது மீண்டும் பொதுவௌியில் பேச ஆரம்பித்துள்ளார். போராட்டக்காரர்கள் அமைதியாக இருப்பதே பசிலின் பேச்சுக்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அண்யைில் சிறிலங்கா பொதுஜனபெரமுனவின் ஊடகமையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, தற்போது நாட்டில் தேர்தல் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.