சூறாவளியாக மாற்றமடைய அடைய வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!!
மாண்டேஸ் (Mandous) சூறாவளியாக தீவிரம் அடைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்றுமுன்தினம் (06) ஏற்பட்ட தாழமுக்கமானது மணிக்கு 22km/h வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (07) தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்காக 640 கிலோமீற்றர் தூரத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு -தென்கிழக்காக 780 கிலோ மீற்றர் தூரத்திலும் காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்காக 840 கிலோ மீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து தென்கிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரு மாண்டேஸ் சூறாவளியாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறும், ஆறுகளில், வாவிகளில், கடல்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை