காரைதீவு பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்!

காரைதீவு பிரதேச சபையின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் (5) திங்கட்கிழமை ஏக மனதாக நிறைவேறியது.

காரைதீவு பிரதேச சபையின் 3வது சபையின் 58 வது மாதாந்த அமர்வு 2022.12.05ம் திகதி திங்கட்கிழமை சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது. சபை அமர்வில் கௌரவ உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், ஏ.எம்.பஸ்மீர், ச.நேசராஜா, த.மோகனதாஸ், சி.ஜெயராணி, ச.சசிகுமார், க.குமாரசிறி, என்.எம்.றனீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

அடுத்த வருடத்திற்கான இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அதன்படி ஏகமனதாக இந்த ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் நிறைவேறி இருக்கின்றது.

இன்றைய அமர்வில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்தபோது உப தவிசாளர் ஏ.எம்.ஜாகீர் மற்றும் கௌரவ உறுப்பினர்களான ஏ.எல். ஜலீல், கே.ஜெயதாசன் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை.

இன்றைய அமர்வில் காரைதீவு விபுலானந்தா தேசிய கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களான மாணவர்கள் மற்றும் அதிபர் ம.சுந்தரராஜன் ஆசிரியர் எஸ். இராஜேந்திரன் ஆகியோருடன் சமூகமளித்து சபை அமர்வை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
சபை அமர்வின் இறுதி நேரத்தில் உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் சமுகளித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.