காரைதீவு பிரதேச சபை வீதி ஒன்றிற்கு நாவலர் பெருமானின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் “நாவலர் வீதி” என பெயர் சூட்ட சபையில் தீர்மானம்!

இலங்கை அரசின் அங்கீகாரத்தோடு இவ்வருடம் நாவலர் ஆண்டு எனப் பிரகடனம் செய்யப்பட்டதோடு நாவலர் பெருமான் பிறந்த 200 வது ஜனன ஆண்டிலே இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமானது பல்வேறுபட்ட நாவலர் பெருமானின் அற்பணிப்பான செயற்பாடுகளை நீளநினையும் வகையில் பல்வேறு”செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளது.

எதிர்வரும் 14.12.2022 தொடக்கம் 18.12.2022 வரை நாவலர் மாநாடு வடக்கிலே முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் சுவாமி விபுலாநந்தர் பிறந்த காரைதீவு மண்ணில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு கி.ஜெயசிறில் அவர்களின் தலமையில் நாவலர் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் வீதி ஒன்றிற்கு நாவலர் பெருமானின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் “நாவலர் வீதி” என பெயர் சூட்ட சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன்.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சி.ஜெகராஜன் அவர்களினால் நாவலர் திருவுருவப்படம் கெளரவ தவிசாளருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் இதில் நாவலர் பெருமானின் நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.