புலம்பெயர்ந்தோரின் முதலீட்டுக்கு அவசியம் முறையான அரசியல் தீர்வு; கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைத்தால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிச்சயமாக முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (08.12.2022) இடம்பெற்ற 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, முதலீட்டு மேம்பாடு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தரப்பினர் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை தவிர்த்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முதலீடுகள் எமது நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டுமானால் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதியானதும், நியாயமானதுமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் முதலீடுகள் மிகவும் அவசியம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை