இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு – வைத்தியர் தீபல் பெரேரா தெரிவிப்பு!!
போதைப்பொருளிற்கு அடிமையாகும் இளம் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிக்கின்றது இவ்வாறு பாதிக்கப்பட்ட இருபது முதல் முப்பது வீதமான பெற்றோரின் பிள்ளைகள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து உடனடியாக கவனம் செலுத்தி அதற்கான தீர்வொன்றை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை வோர்ட்களிற்கு செல்லும்போது இதனை நான் அவதானித்துள்ளேன் நோயாளிகளின் விபரங்களை அடிப்படையாக வைத்து நோயாளர்களின் விபரங்களை என்னால் பெறமுடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுடன் நாங்ள் பேசும்போது சில வேளைகளில் தாய் இருக்கமாட்டார் அல்லது தந்தை இருக்கமாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தைமார் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகமாக காணப்படுகின்றது ஆனால் சில தாய்மாரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் தங்கள் தாத்தா அல்லது பாட்டியுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வதற்கு இந்த ஆபத்தான போக்கு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் பாடசாலை காலத்திலேயே போதைப்பொருளிற்கு அடிமையாகயிருக்கவேண்டும்,அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்பதால் நான் இது குறித்து கருத்து வெளியிட தீர்மானித்துள்ளேன் என தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாத்திரம் நாட்டிற்கு உண்மை நிலை தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை மோசமடைவதை தடுப்பதற்காக நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்,இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
கருத்துக்களேதுமில்லை