இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு…
நாவலர் ஆண்டு – பிரகடனத்தை முன்னிட்டு
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின்
200 ஆவது ஜனன ஆண்டிலே
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்
சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றம்
இந்து சமய மாணவர்களிடையே நடத்தும்
பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு
விடய அறிவுறுத்தல் – (இந்து சமய மாணவர்களுக்கானது.)
பேச்சு மற்றும் கதாப்பிரசங்க நிகழ்வுகளுக்கான தலைப்புகள் – பிரிவு ரீதியாக
• பாலர் பிரிவு (வகுப்பு – 01, 02, 03)
பேச்சாற்றல்
“நாவலர் தாத்தா நமக்கான வழிகாட்டி” – (இரண்டு நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும்)
கதாப்பிரசங்கம்
நாவலர் தாத்தா நமக்காகச் சொன்ன நீதி வாக்கியங்கள் – (இரண்டு நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும்)
• கீழ்ப்பிரிவு (வகுப்பு – 04, 05, 06)
பேச்சாற்றல்
“நாவலர் தாத்தா நமக்குச் சொல்லிய சைவ வாழ்வியல் ” – (மூன்று நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும்)
கதாப்பிரசங்கம்
நாவலர் தாத்தா நமக்காகப் போதித்த ஒழுக்க விழுமியங்கள் (மூன்று நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும்)
• மத்திய பிரிவு (வகுப்பு – 07,08)
பேச்சாற்றல்
“ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் சைவத் தமிழ் உலகின் அடையாளம்” – (நான்கு நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும் )
கதாப்பிரசங்கம்
நாவலர் என்றொருவர் பிறந்திருக்காவிடில் – (நான்கு நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும் )
• மேற்பிரிவு (வகுப்பு – 09, 10, 11)
பேச்சாற்றல்
“சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கு நாவலர் பெருமான் ” – (ஐந்து நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும் )
கதாப்பிரசங்கம்
நாவலர் பெருமான் அவர்களின் கல்விப்பணி – (ஐந்து நிமிடங்களிற்கு மேற்படாது அமைதல் வேண்டும் )
• பொறுப்பாசிரியர்கள், தங்களின் பொறுப்பில் உள்ள வகுப்புச் சார்பாக, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு நிகழ்வுக்குப் பொருத்தமான ஒரு மாணாக்கரைத் தெரிவு செய்துகொள்ளலாம்.
• ஒருமாணவன் பேச்சு மற்றும் கதாப்பிரசங்கம் ஆகிய இரண்டிலும் பங்குபற்றுவதற்கும் தடை இல்லை.
• நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்து, 0776569156 எனும் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
• அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அறநெறிப் பாடசாலையின் பெயரைக் கட்டாயம் குறிப்பிடவும்.
• அறநெறிப் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்கள் தாங்கள் கற்கும் பாடசாலையின் பெயரைக் குறிப்பிடவும்.
• நிகழ்வு வழங்கும் மாணவரின் கலாசாரத் தோற்றத்தோடு கூடிய படத்தினையும் கட்டாயம் முழுப்பெயர், முகவரி ஆகிய விபரங்களோடு அனுப்பி வைக்கவும்.
• அனுப்ப வேண்டிய இறுதித் தினம் – 10.12.2022
o வெற்றியாளர்கள் – பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவர்.
o பொருத்தமான பேச்சு நிகழ்வுகள் மற்றும் கதாப்பிரசங்க நிகழ்வுகள் – இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலைவரிசையில் இடம்பெற்றுவரும் அறநெறிச்சாரம் நிகழ்விலும் ஒலிபரப்பாகும் என்பதையும் கவனத்திற்கொள்க.
o தொடர்புகளிற்கு – இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜி : 0779309257, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றம், காரைதீவு – அம்பாறை
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கருத்துக்களேதுமில்லை