இன்றைய வானிலை அறிக்கை..
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “மாண்டஸ்” சூறாவளி புயல் நேற்று இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 280 கிமீ தொலைவில் அட்சரேகை 12.2N மற்றும் 80.6E தீர்க்கரேகைக்கு அருகில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு இன்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை தென்மேற்கு வங்கக்கடலில் கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இதன்படி, நாடு மற்றும் தீவைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை