மாண்டஸ் சூறாவளியால் இலங்கையில் பதிவான உயிரிழப்புகள்! அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்

தமிழகத்தின் மாண்டஸ் சூறாவளி (Cyclone Mandous) கரையை கடந்துள்ள நிலையில், அதன் காரணமாக இலங்கையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 13,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

தகவலின் படி பலாங்கொடை, மொரஹெல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மாண்டஸ் சூறாவளியால் இலங்கையில் பதிவான உயிரிழப்புகள்! அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல் | Cyclonic Storm Mandous Effects In Sri Lanka

அத்துடன் இலங்கையின் வானிலையை பொறுத்தவரை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் பெய்யும்.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை அலைகள் எழக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் கரையோர கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.