ரணில் சுமந்திரன் இரகசிய பேச்சு! ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கசிந்த தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உத்தேச பேச்சுக்களை ஒட்டிய தமிழர் தரப்பின் ஒன்றுபட்ட கருத்து நிலைப்பாட்டை இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசமைப்புக் கவுன்சிலுக்கு ஏழாவது உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் பேரினவாதத் தரப்புக்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை பற்றியும் அவர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான பல அரசியல் தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான அரசியல் பார்வை நிகழ்ச்சி,
கருத்துக்களேதுமில்லை