31ஆம் திகதியின் பின்னர் அரச துறையில் ஏற்படவுள்ள நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

60 வயதை கடந்த அரச உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள போதிலும் அரச சேவைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31ம் திகதிக்கு பிறகு 60 வயதை எட்டிய அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசாங்க பணியில் வீழ்ச்சியடையும் என பெரும்பாலான அரச தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

31ஆம் திகதியின் பின்னர் அரச துறையில் ஏற்படவுள்ள நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Sri Lanka Government Staff Pension

இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவிடம் வினவிய போது,

வருடாந்தம் சராசரியாக 18,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இம்முறை மாத்திரம் சுமார் 25,000 அரச ஊழியர்கள் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரச சேவையின் செயற்பாட்டிற்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது. ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும், அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடித்தவர்களும் அரச சேவையில் இணைகின்றனர்.

31ஆம் திகதியின் பின்னர் அரச துறையில் ஏற்படவுள்ள நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Sri Lanka Government Staff Pension

குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்கு குறைந்த தரத்திலான தகுதி வாய்ந்த அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டது.

இது தொடர்பான உத்தரவு ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வர வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.