ரீ ரிலீஸான பாபா முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா.
இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி தயாரித்தும் இருந்தார் ரஜினிகாந்த்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொரியாலா, நம்பியார், கவுண்டமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அன்றைய காலகட்டத்தில் படுதோல்வியடைந்த இப்படத்தை மீண்டும் தற்போது ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
நேற்று வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் மாபெரும் அளவில் கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில், ரீ ரிலீசான பாபா திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை