மீள ஆரம்பமான விமான சேவை – வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பலாலிக்கான விமான சேவை, தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை, வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் அநுராதபுரம் பொலனறுவை போன்ற வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

 

“அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவு சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிக்கின்றன. விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டம் கட்டமாக விஸ்தரிப்பதற்கு தேவையான நகர்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

சேவை விரிவுபடுத்தல்

மீள ஆரம்பமான விமான சேவை - வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு! | Jaffna International Airport Palaly India Douglas

 

இதுதொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிக்கவுள்ளேன். இந்நிலையில், மக்கள் சரியான முறையில் இதனைப் பயன்படுத்துவார்களாயின், எதிர்காலத்தில் இந்தியாவிற்கான சேவைகள் விரிவுபடுத்தப்படும்.

அதுமட்டுமன்றி, ஏனைய நாடுகளில் இருந்தும் சேவையை முன்னெடுப்பதற்கும் விமான நிறுவனங்கள் முன்வரும். இதன்மூலம், எமது பிரதேசத்தின் சுற்றாலாத்துறை வளர்ச்சியடைவதுடன், ஏற்றுமதி இறக்குமதி செயற்பாடுகளுக்கான நேரடி வாசலாகவும் பலாலி விமான நிலையம் செயற்படும்.

வலுவடையும் பொருளாதாரம்

மீள ஆரம்பமான விமான சேவை - வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு! | Jaffna International Airport Palaly India Douglas

 

இது எமது மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும். அத்துடன், காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் போன்றவற்றிற்கு இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்கும் என்னுடைய முயற்சிகளும் விரைவில் சாத்தியமாகும்” எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.