கர்த்தார் கால்பந்து போட்டியால் பிரான்ஸில் வெடித்த கலவரம்! ஒரே நேரத்தில் 74 பேர் கைது
உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது.
முதலாவது கால் இறுதியான போர்த்துகல் – மொராக்கோ அணிகள் மோதிய போட்டியில் போர்துக்கல் அணி 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி பிரான்ஸ் – பிரித்தானியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற நிலையில் போட்டிகளைக் காண 20,000 பேர் வரை Champs-Élysées பகுதியில் குவிந்தனர்.
இந்த போட்டி குறித்து ரசிகர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ள நிலையில் மோதலை தடுக்க காவல்துறையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
மேலும், இந்த மோதல் சம்பவத்தில் 74 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை