கனடிய பிரதமரை அவசரமாக சந்திக்க கோரிக்கை விடுக்கும் மாகாண முதல்வர்கள்
கனடாவின் மாகாண முதல்வர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.
கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார செலவுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
சுகாதார பராமரிப்பு செலவுகளை மேலதிகமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மாகாண முதல்வர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
சில மாகாணங்களில் வரவு செலவுத் திட்டத்தில் சாதக நிலையை காணப்பட்டாலும் மேலதிக சுமையை ஏற்றுக் கொள்ள தயார் இல்லை என மாகாண முதல்வர்கள் தெரிவித்துள்ளர்.
பிரதமர் ட்ரூடோ உடன் மூடிய கதவு பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட வேண்டும் என முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய அளவில் சுகாதார செலவுகளை மத்திய அரசாங்கம் 22 வீதமே தற்பொழுது ஏற்றுக் கொள்கின்றது.
இந்த தொகையானது 35 வீதமாக உயர்த்தப்பட வேண்டும் என மாகாண முதல்வர்கள் கூறியுள்ளனர்.
மாகாண சுகாதார அமைச்சர்களும் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
நாட்டின் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் பேண்தகு அடிப்படையிலும் நியாயமான அடிப்படையிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என மாகாண முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை