குஜராத் சட்டசபை தேர்தல் : பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி…

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய திகதிகளில் தேர்தல் இடம்பெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் 8ஆம் திகதி எண்ணப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது.

அந்த கட்சி 156 இடங்களை கைப்பற்றிய அதேவேளை கடந்த முறையை விட கூடுதலாக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் குஜராத்தில் தொடர்ந்து 7ஆவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்ற அதேநேரம் 60 தொகுதிகளை அந்த கட்சி இழந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.