இது எமது அரசு அல்ல! அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க தயாராக இல்லை! முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பசில்!

தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றிரவு (12) இரவு “டிவி தெரண”வில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் பேசும் போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இன்னும் சில நாட்கள் கவலைப்படாமல் இருந்தால், நம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு தெளிவாக உள்ளது. இப்போது போராட்டம் இல்லை. என்ன வித்தியாசம்? 69 இலட்சம் வாக்குகளோடு ஆட்சிக்கு வந்தவரை அப்புறப்படுத்துமாறு மக்கள் கேட்டனர். அவர் போய்விட்டார் . இப்போது என்ன நடந்தது? இப்போது உணவு இருக்கிறதா? மக்களின் கஷ்டங்கள் தீர்ந்து விட்டதா? அதை ஏன் இப்போது ஊடகங்களில் காட்டவில்லை?
மக்களுக்காக தியாகம் செய்த கோட்டாபய இன்று துயரத்தில் இருக்கிறார் என அவர் தெரிவித்துளளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.