குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ள ரக்ஷிதா! கணவருடன் சேர வாய்ப்பில்லையா?
பிக்பாஸ் வீட்டில் ரக்ஷிதா பேசிய விடயம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரபலங்கள், கலைஞர்கள் என 21 பேர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஆரம்பித்து சுமார் 65 நாட்களை கடந்துள்ளது, தற்போது 11 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.
ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.
இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
ஆனால், இதுகுறித்து பேசிய தினேஷ் என்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான்.
மற்றபடி நானும் ரக்ஷிதாவும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
மேலும், ரக்ஷிதாவுக்கு தான் எப்போதும் ஆதரவாக இருப்பதாகவே கூறி வருகிறார். இதில் விக்ரமன் உடன் பேசிக் கொண்டிருக்கும் போது குழந்தை தொடர்பில் பேசியிருந்தார். அவர் கூறியதாவது,
”நான் என்னோட 35வது வயதில் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன், 35 வயது என்ற அளவுகோல் ஏன் வைத்தேன் என்றால், அப்போது தான் இன்னும் நிறைய கற்று கொண்ட அனுபவம் கிடைக்கும் அதன் மூலம் ஒரு குழந்தையை வளர்க்க கூடிய நம்பிக்கை எனக்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
அதற்கு விக்ரமன் ‘ஆண் குழந்தையா பெண் குழந்தையா’ என்று கேட்க அதற்கு ரஷிதா ‘பெண் குழந்தை தான். எனக்கு பெண் குழந்தை என ரொம்ப பிடிக்கும்.’ என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ரச்சித்தா தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்பது போலவே தெரிகிறது. ஏற்கனவே ஒரு எபிசோடில் பேசிய ரக்ஷித்தா ‘அம்மா அப்பா எல்லோரும் தன்னுடைய குழந்தைக்கு குழந்தைக்கு என அனைத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.
திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு விடுவார்கள்.
நான் சம்பாதிக்கிறேன் நான் ஏன் என்னுடைய தாய் தந்தைக்கு கொடுக்கக் கூடாது. நீ யார் அதை கேட்பதற்கு என்று கண்டிப்பாக ஒரு எண்ணம் தோன்றும்.
அதுபோன்ற நிலைமை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது. நான் அந்த நிலைமையை மிகவும் மோசமாக அனுபவித்து இருக்கிறேன் என்றும் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை