ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கும் கனடா

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெருந்தொக்காயன ஆயுத வாகனங்களை கனடா இவ்வாறு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கும் கனடா | Haiti Canada Bob Rae

மேலும் வன்முறைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கனடா தடைகளை அறிவித்துள்ளது.

கனேடிய அரசாங்க பிரதிநிதிகள் மூவர் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இந்த பிரதிநிதிகள் ஹெய்ட்டி தேசிய பொலிஸாருடன் இணைந்து செயற்படுவார்கள் எனவும், ஹெய்ட்டியின் தேவைகள் குறித்து மதிப்பீடு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய பிரதிநிதி பொப் றே இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டிக்கு மேலும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹெய்ட்டியின் அரசாங்கப் படையினருக்கும் ஆயுத கும்பல்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.