சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணைபோக வேண்டாம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரிக்கை
சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணைபோக வேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத் தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்தியிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள், எதிர்வரும் திங்கள் (19),செவ்வாய்(20) ஆகிய நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் மக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.
அத்துடன் அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலை வாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை