இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில்.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் (18), கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை.சோ
சேனாதிராசா தலைமையில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர், பொருளாளர், வடக்குமாகாண அவைத்தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள், வடக்குமாகாண சபையின் மேனாள் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள்,அபிமானிகள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை