தமிழர் தாயக புற்றுநோய் வைத்தியசாலைக்கு கனேடிய தமிழர்களால் மருந்துகள் வழங்கிவைப்பு..

கனேடிய தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது.

தமிழர் தாயக புற்றுநோய் வைத்தியசாலைக்கு கனேடிய தமிழர்கள் அளித்த நன்கொடை | Canadian Tamils Who Donated Drugs

 

இலங்கையின் மோசமான நிதிச் சரிவால் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் எதிர்கொண்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022 செப்டம்பர்11ம் திகதி கனேடிய தமிழ் காங்கிரஸின் 14வது வருடாந்த தமிழ் கனேடிய நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6 மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்குவது எனத் திட்டமிடப்பட்டது.

தமிழர் தாயக புற்றுநோய் வைத்தியசாலைக்கு கனேடிய தமிழர்கள் அளித்த நன்கொடை | Canadian Tamils Who Donated Drugs

இந்த நன்கொடையின் முதற்கட்டமாக கனேடிய தமிழ் காங்கிரஸினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதற் தொகுதி மருந்துப் பொருட்கள் இன்றையதினம் (20) மாலை 4:30 மணியளவில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கனேடிய தமிழர் பேரவையின் மனிதநேயப் பணியாளர் சிவம் வேலுப்பிள்ளை, செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமரன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்கள், பணியாளர்கள், நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.