கனடாவில் முதியவர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது சிறுமிகள்!

கனடாவில் சமூக ஊடகத்தின் மூலமாக ஏற்பட்ட தொடர்பில் சந்தித்த முதியவரை வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது  சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கனடாவில் முதியவர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது சிறுமிகள்! | 8 Teenage Girls Stabbed Old Man To Death In Canada

ரொறன்ரோவில் ரயில் நிலையம் அருகே மக்கள் கூடும் சந்தை பகுதியில் 59 வயது முதியவர் ஒருவரை 8 பதின்ம வயது சிறுமிகள் அடித்து தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்து கிடந்த அவரை காப்பாற்ற, பக்கத்தில் இருந்தவர்கள் துணை மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இருப்பினும், இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், படுகாயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சிறுமிகள் அவரை அடித்து, தாக்கியிருக்க கூடும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

 

கனடாவில் முதியவர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது சிறுமிகள்! | 8 Teenage Girls Stabbed Old Man To Death In Canada

இந்த சம்பவத்தில் அந்த முதியவரின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. சாட்சிகளின் அடிப்படையில் 8 பதின்ம வயது சிறுமிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 29-ம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.