எல்.பி.எல் தொடரில் 3 ஆவது முறையாக கிண்ணத்தை வென்றது ஜப்னா கிங்ஸ் அணி.

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது.

தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

 

கொழம்போ ஸ்டார்ஸ் அணியுடனான இன்றைய இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழம்போ ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.