வெளிநாடொன்றிலிருந்து முதற்தடவையாக கட்டுநாயக்காவில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்!!

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கான பயணத்தை தவிர்த்த சுற்றுலா பயணிகள் அண்மைக்காலமாக நாடு ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதை அடுத்து தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி 2022 டிசம்பர் 26 ஆம் திகதி வரையில் 701,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளிநாடொன்றிலிருந்து முதற்தடவையாக கட்டுநாயக்காவில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் | Tourists From Moldavia

இந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்திலுள்ள மோல்டா நாட்டிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகள் முதற்தடவையாக இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த குறித்த சுற்றுலாப், பயணிகள் இலங்கையில் 12 நாள்கள் தமது சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

50 பேரைக் கொண்ட குறித்த சுற்றுலாக் குழுவினர் இலங்கையின் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்லவுள்ளனர். இவர்களை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், விமானசேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்டவர்கள் விமானநிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.