பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி: அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அசுர புயல்

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது.

கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது.

இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார்.

 

பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி: அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அசுர புயல் | Niagara Falls Frozen Danger Snow Usa

இந்த நிலையில் முக்கிய சுற்றுலாத்தளமான நயாகரா அருவி அதிர்ச்சியூட்டும் வகையில் பனியால் உறைந்திருந்தது.

நயாகரா அருவிக்கு தெற்கே 25 மைல் தொலைவில் தாக்கிய பேரழிவு புயலின் பின்விளைவாக வான்வழி காட்சிகள் வெண்மையாக காணப்பட்டது.

நீர்முனைக்கு அருகில் இருந்த மலைகள் அடர்த்தியான பனியால் மூடப்பட்டிருந்தன.

அருவியின் மீது ஒரு வினாடிக்கு 3,160 டன் நீர் பாய்கிறது.

பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி: அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அசுர புயல் | Niagara Falls Frozen Danger Snow Usa

 

அதாவது, நீரின் சுத்த அளவு காரணமாக அது முற்றிலும் உறைவதில்லை. மாறாக பெரும்பாலும் மேற்பரப்பு நீர் மற்றும் மூடுபனி உறைகிறது.

திங்களன்று நியூயார்க் நகருக்கான அவசரகால பிரகடனத்திற்கு ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.

அத்துடன் பேரழிவில் இருந்து மீள உதவும் நிதியை விடுவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.