கனடாவில் ஒரே ஆண்டில் இரண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி
கனடாவில் ஒரே ஆண்டில் இரண்டு இரட்டைக் குகழந்தைகளை பெற்றெடுத்த தம்பதியினர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிரம்டனைச் சேர்ந்த நிக்கலோசன் – ரேவா தம்பதியினரே இவ்வாறு இரண்டு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
இந்த இரண்டு இரட்டைக் குழந்தைகளும் இந்த 2022ம் ஆண்டுடில் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளை ரேவா ஈன்னெடுத்தார்.
இந்த குழுந்தைகளுக்கு கய்ரா மற்றும் சாமார் என பெயரிட்டனர்.
கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி ரேவா, மேலும் ஓரு ஜோடி இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தார்.
இந்த தடவை இரண்டும் பெண் குழந்தைகள் என்பதுடன் அவற்றுக்கு மியா மற்றும் மோரியா என பெயரிடப்பட்டது.
சிறிதளவு தயக்கம் காணப்பட்டாலும் இவ்வாறு ஒரே ஆண்டில் இரண்டு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதனை அதிர்ஸ்டமாக கருதுவதாகவும் ரேவா தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை