நான் தவறான உறவில் இருந்தேன்- முதன்முறையாக பரபரப்பு தகவலை கூறிய நடிகை அஞ்சலி
தெலுங்கு சினிமாவில் முதலில் நடிக்க துவங்கி பின் திறமையான நடிகை என்ற பெயரோடு தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.
ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்ற அஞ்சலி, அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்கள் நடித்து முக்கிய நாயகியாக வலம் வந்தார்.
இடையில் அஞ்சலிக்கும், நடிகர் ஒருவருக்கும் காதல் ஏறப்ட இருவரும் விரைவில் திருமணம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர்கள் தற்போது பிரிந்து தங்களது சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அஞ்சலி, டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கேரியரை கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என வெளியே வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
கருத்துக்களேதுமில்லை