பிக் பாஸ் ஜனனியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? லேட்டஸ்ட் போட்டோ படுவைரல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறாமல் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் போட்டியாளரை கொண்டு வருவது விஜய் டிவியின் வழக்கமாகிவிட்டது. லாஸ்லியாவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டார்.
ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு அதிகம் வரவேற்பு இருந்தாலும், அவர் அமுதவாணனின் பேச்சை கேட்டு அனைத்தையும் செய்கிறார் என்கிற விமர்சனம் எழுந்தது. அதனால் அவர் சில வாரங்களுக்கு முன் எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது ஜனனி அவரது குடும்பத்தினரை மீண்டும் சந்தித்து இருக்கிறார். தனது தங்கை உடன் எடுத்த போட்டோவை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அச்சு அசல் அவரும் ஜனனி போலவே இருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை