பீலே இறந்தது தெரியாமல் இன்னமும் காத்திருக்கும் அவரது 100 வயது தாயார்
ஜாம்பவான் பீலேவின் தாயார் 100 வயதான செலஸ்ட்டை அவரது மகள் மரியா லூசியா என்பவரே கவனித்து வருகிறார். இவரது இல்லத்தில் தான் இறுதிச்சடங்குகளுக்கு முன்னர் பீலேவின் உடல் வைக்கப்படுகிறது.
இதன் பின்னர் உலகின் மிக உயரமான கல்லறையில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால், மரிய லூசியா இதுவரை பீலே இறந்தது தொடர்பில் தமது தாயாரிடம் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
தாயாரிடம் இது குறித்து பேசினேன், ஆனால் அவர் தற்போது இன்னொரு உலகத்தில் இருக்கிறார் என்றே நம்புகிறேன், அவருக்கு அது புரிந்திருக்க வாய்ப்பில்லை என மரிய லூசியா குறிப்பிட்டுள்ளார்.
பீலேவின் பெயரை உச்சரித்ததும், கண் திறந்த தாயார், நாம் அவருக்காக செபிக்க இருக்கிறோம் என கூறியதை அவர் புரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை என்கிறார் மரிய லூசியா.
பெருங்குடல் புற்றுநோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த பீலே, வியாழக்கிழமை உறுப்புகள் செயலிழந்து மரணத்தைத் தழுவினார். கடந்த மாதந்தான் அவரது தாயார் செலஸ்ட் 100 வயதை கொண்டாடியிருந்தார். அதை காணொளியாக பதிவு செய்திருந்த பீலே தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை