600 ஆண்டுகளில் முதல் முறையாக.. பதவியை துறந்த ஜேர்மனியின் போப் ஆண்டவர் மறைவு
கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக்ட் என மாற்றிக்கொண்டார்.
2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார். போப் ஆண்டவர் பதவியை யாரும் தாமாக முன் வந்து துறந்ததில்லை.
ஆனால், கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக பதவியை துறந்த போப் ஆண்டவர் பெனடிக்ட் தான்.
இந்த நிலையில் முன்னாள் போப் ஆண்டவரான 16ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக, தனது 95வது வயதில் காலமானதாக வாட்டிகன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர் உடல்நலம் பாதித்தபோது தற்போதைய போப் பிரான்சிஸ் அவரை நேரில் சந்தித்தார். 16ஆம் பெனடிக்ட் பதவியில் இருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கி, அதற்காக மன்னிப்பும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை