நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான்

நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம்.

சில காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான் | Diabetic Patients Drink And Avoid Health Tips

நீரிழிவு நோயில் உணவு முறை, உடற்பயிற்சி, நோயின் தீவிரத்தை அறித்துக் கொள்ளல், இன்சுலின் பயன்படுத்தல் போன்றவற்றை முறையே செய்தல் வேண்டும்.

கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இனிப்புப்பான பதார்த்தங்களை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.

நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான் | Diabetic Patients Drink And Avoid Health Tips

 

பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

எமது உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு நாளும் போதுமான அளவு நீர் மற்றும் நீர் பானங்கள் குடிப்பது நன்மை தரும்.

நீரிழிவு நோயாளர்கள் உடலில் எப்போதும் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோப்பி, தேநீர் இரண்டுமே ஆரோக்கியமானது ஆனால் அளவாக இருந்தால் நாளொன்றுக்கு இரண்டு கப் கோப்பி அல்லது தேநீர் எடுத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளின் சோர்வை போக்கி புத்துணர்ச்சியூட்டும் பானங்களாக மூலிகை தேநீர் கலவைகள் உள்ளது.

 

தினம் ஒரு மூலிகை தேநீர் எடுப்பதன் மூலம் நீரிழிவு பாதிப்புகளையும் குறைக்கலாம். இலவங்கபபட்டை தேநீர், தனியா தேநீர், வெந்தய தேநீர், புதினா தேநீர், கிரீன் டீ என தினம் ஒன்றாக சேர்த்து வருவது நீரேற்றத்தை அதிகரிக்க உதவும்.

பழச்சாறுகள் சர்க்கரை சேர்க்காதவற்றில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அதனால் நாள் ஒன்றுக்கு 150 மில்லி அளவு பழச்சாறுகள் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் பாலில் நீரேற்றம் மற்றும் கல்சியம், புரதம் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் தினசரி ஒரு கப் அளவில் எடுத்துவரலாம்.

நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான் | Diabetic Patients Drink And Avoid Health Tips

பாலுடன் சிட்டிகை மஞ்சள், சிட்டிகை மிளகுத்தூள் கலந்து எடுத்துவருவதன் மூலம் உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.