600 கோடியில் விடுதி… 2000 கோடியில் வீடு… 2022ல் முகேஷ் அம்பானி வாங்கிய பொருட்கள் : சுவாரசிய தகவல்!!

முகேஷ் அம்பானி 2022 ஆண்டில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த வாய்பிளக்க வைக்கும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹொட்டலில் 73.4% பங்குகளை $98.15 மில்லியன் – ரூ 2000 கோடி ஒப்பந்தத்தில் வாங்கியது. இந்த ஹொட்டலில் 248 அறைகள் உள்ளன மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி வந்து செல்வார்கள்.

எகனாமிக் டைம்ஸின் கூற்றுப்படி, முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் அதி ஆடம்பரமான வில்லாவை வாங்க ரூ.640 கோடி செலவு செய்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஒப்பந்தத்தை செய்து முடித்தார். மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு முகேஷ் அம்பானி ரூ.632 கோடி செலவில் பிரித்தானிய நாட்டில் விடுதி ஒன்றை வாங்கி கொடுத்தார்.

கடந்த பிப்ரவரி 2022ல் முகேஷ் அம்பானி ரூ.13 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கினார். இந்த காருக்கான சிறப்பு நம்பர் ப்ளேட்டுக்காக தனியாக ரூ. 12 லட்சம் செலவழித்துள்ளார்.

 

கடந்த அக்டோபரில் முகேஷ் அம்பானி ரூ.13.5 கோடி செலவில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம் காரை வாங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.