லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் புதிய விலை இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,409 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,770 ரூபாவாகும்.

அத்துடன், 2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 822 ரூபாவாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.