பிக்பாஸ் வீட்டுக்குள் சன்னி லியோன்? உடைந்த உண்மை
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 87 நாட்களை கடந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலாவதாக மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி நுழைவாரா என கேட்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தனலட்சுமி வெளியேறியவுடன் அவர்தான் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பொலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை சன்னி லியோன் பேபி டால் பாடலின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.
அண்மையில் “ஓ மை கோஸ்ட்” என்னும் ஹோரர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், பிரத்தியேக சேனல் ஒன்றில் பிரத்தியே நேர்காணலில் பங்கு பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பதில் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
“இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து எங்கேயாவது ஒரு இடத்தில் வருத்தப்பட்டது உண்டா?” என கேட்கப்பட்டதற்கு, இல்லை எப்போதும் இல்லை. உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்றேன்.
அந்த நேரத்தில் என் வாழ்க்கை லட்சியம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது தான். ஓரிரு நாட்களாவது பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்பினேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து, “தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? ஏனென்றால், தற்போது தமிழ் பிக் பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரி நடைபெற காத்திருக்கிறது.
அதில் நீங்கள் செல்ல விரும்புவீர்களா?” என கேட்கப்பட்டதற்கு “இல்லை….. நான் விருந்தினராக போயிட்டு உடனே வெளியே வந்துடனும். அங்கயே இருந்துவிடமாட்டேன். அவங்க கூப்பிட்டாங்கன்னா போக விரும்புறேன்.” என கூறியிருக்கிறார்.
கருத்துக்களேதுமில்லை