இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் -கரு ஜயசூரிய
இலங்கையில் உருவாகியுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, ஒரு நாடாக இன்று பாரிய சுற்றாடல் நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கும் போது 29 வீதமாக இருந்த நாட்டின் காடுகளின் அளவு இன்று 16 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தினமும் ஒரு யானையாவது இறக்கிறது என்று தெரிவித்த அவர் 2022ஆம் ஆண்டில் மட்டும் 395 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பாரிய அனர்த்தத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை