பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஷிவானி? கடுப்பில் கொந்தளிப்பு!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அதோடு கவர்ச்சி நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
2.9m ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என கிண்டலடித்துள்ளார். அதற்கு ஷிவானி கடுப்பில், எனக்கு நீங்க தான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்றீங்களா? என்றும் ஒருத்தரை பற்றி தெரியாமல் அவங்களை பற்றி தேவையில்லாமல் வார்த்தைகளை விடாதீங்க என்று கோபமாக பதிலளித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை