சுங்க அதிகாரிகளால் சிவப்பு சீனி கைப்பற்றபட்து.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் வெள்ளை சீனி என்று கூறி குறித்த சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1,200 மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதில் 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட சீனி கையிருப்பின் பெறுமதி சுமார் 241 மில்லியன் ரூபா எனவும், குறித்த சீனி கையிருப்பு பறிமுதல் செய்யப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை