தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது..
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது.
களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.
இக்கூட்டத்தில் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக்கட்சியின் தலைவரினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பமானது. இன்றைய கூட்டத்தில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை