70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி

70 வயதிலும் சூப்பர் மொடலாக பெவர்லி ஜான்சன் சாதித்து வருகின்றார்.

திறமைக்கு வயது இல்லை என்பார்கள், அது எந்த துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் பலர் சாதித்து வருகின்றார்கள்.

அதிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பலர் சாதித்து வருகின்றார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்தவர்தான் 70 வயது பெவர்லி ஜான்சன்.

1952ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பெவர்லி ஜான்சன். இவர் அமெரிக்க மொடல், நடிகை, பாடகி மற்றும் தொழிலதிபர் என பன்முகத் திறமைகளை தம்வசம் வைத்திருப்பவர்.

70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி | Beverly Johnson Super Model In 70 Years Old

இவர் இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 1971ஆம் ஆண்டு தனது 19 வயதில் பில்லி போர்ட்டரை முதலாவதாக செய்து கொண்டார்.

பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விவாரத்துக் பெற்றுக்கொண்டார். பிறகு தனது 25 வயதில் டேனி சிம்ஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பிறகு அவருடன் விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்.

70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி | Beverly Johnson Super Model In 70 Years Old

இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இவருக்கு 70 வயதாகிறது. மேலும் இவருக்கு 4 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

பெவர்லி ஜான்சன் 1970ஆம் ஆண்டு மொடலிங் துறைக்குள் நுழைந்தார். அந்தக் காலத்தில் சிகப்புநிறத்தோல்களும் நீல நிறக் கண்கள் கொண்ட பெண்களுமே அதிகம் வரவேற்கப்பட்டனர்.

70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி | Beverly Johnson Super Model In 70 Years Old

கறுப்பின பெண்ணான பெவர்லி ஜான்சனுக்கு பல நிராகரிப்புகள் மட்டுமே இருந்தது. ஆனால் எதையும் நினைத்துக் கவலைக் கொள்ளாத பெவர்லி அந்தத் துறையிலே தன்னை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதனால் மொடலிங் துறையை நேசித்து அதற்கென தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு நாளடைவில் வெற்றியும் பெற்றார்.

70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி | Beverly Johnson Super Model In 70 Years Old

அதற்கு ஆதாரமாக 1974ஆம் ஆண்டில், அமெரிக்கன் வோக்கின் அட்டைப்படத்தில் தோன்றிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மொடலாகவும், அதே ஆண்டு பிரெஞ்சு எல்லே இதழின் அட்டைப் பக்கத்தில் தோன்றிய முதல் கறுப்பினப் பெண்ணாகவும் இடம் பிடித்தார்.

இவருக்கு தற்போது 70 வயதாகிய நிலையும் தனது உடலை இன்றும் கவர்ச்சியாக வைத்திருக்கிறார்.

70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி | Beverly Johnson Super Model In 70 Years Old

இதற்கு காரணம் தியானம், யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் காலை வேளையில் காலை உணவுக்கு பதிலாக எலுமிச்சை மற்றும் ஸ்ட்ரோபெரிகள் மட்டுமே எடுத்துக் கொள்வாராம். மதியம் மற்றும் இரவு உணவு வேளைகளில் இறைச்சிகள் மற்றும் வேகவைத்த காய்கறிகளை மட்டும் எடுத்துக்கொள்வாராம்.

70 வயதிலும் தீராத ஆர்வம்: மொடலிங்கில் கெத்து காட்டும் பாட்டி | Beverly Johnson Super Model In 70 Years Old

மேலும், இவரின் உடலை அறுவைச்சிகிச்சை மூலம் தான் பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.