வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் போராட்டம் தொடர்கிறது..
வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 5 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது.
வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழில் நாவற்குழி சந்தியில் இடம்பெற்றுவருகிறது.
“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த 05 திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை