பெற்றோராக போறோம் – ஆண் தம்பதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் தாங்கள் பெற்றோராவ போவதாக அறிவித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய – அமெரிக்கர்களான அமித் ஷா மற்றும் ஆதித்யா இருவரும் பல தடைகளை தாண்டி கடந்த 2019ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில், தற்போது அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களின் பல வருட கனவு பூர்த்தி ஆகி விட்டதாகவும், அப்பா ஆகப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள ஆதித்யா மற்றும் அமித் ஷா ஆகியோர், குழந்தையின் Ultra Scan புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
மே மாதத்தில் இவர்களின் குழந்தை பிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பொதுவாக குழந்தை பெற்று கொள்வது பற்றி யோசிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் நாங்கள் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பேசி இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குழந்தை பெற்றுக் கொள்ள வழி தேடிய போது வாடகைத் தாய் உள்ளிட்ட விஷயங்களை யோசித்து இறுதியில் Egg Donor ஒருவரின் உதவியுடன் அவர்கள் தங்களின் குழந்தையை பெற்றுக் கொள்ள போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை